செவ்வாய் கிரகத்தில் நீர் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஒரு மாபெரும் பனிப் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 82 கி.மீ. குழி அகலம் 1.8 கி.மீ. என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த சிறு கோளை ஆராயும் முயற்சிகளை தொடர்ந்து வருகின்றன.
ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று யூடியூப்-ல் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி, வீடியோ ஒன்று வெளியிட்டது. அதில் கொரோலெவ் பள்ளம் என்று அழைக்கப்படும் பனிக்கட்டி செவ்வாய் பள்ளத்தாக்கின் தனித்துவமான காட்சியின் வீடியோ வெளியிட்டிருந்தது.

இந்த பள்ளம் செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரமாக இருக்கக் கூடும் என்றும் எதிர்காலத்தில் மனித, குடியேற்றவாசிகளக்கு நன்மை பயக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த கொரோலெவ் பள்ளம் என்று அழைக்கப்படும், செவ்வாய் கிரகத்தின் பனி பள்ளத்தை, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டரால் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளம் பனியால் நிரம்பியுள்ளது. 82 கி.மீ. அகலமுள்ள கொரோலெவ் பள்ளம், செவ்வாய்கிருகத்தின் வடக்கு தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் வடுக்கு துருவ தொப்பியை ஓரளவு சூழ்ந்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் மையம் 1.8 கிலோ மீட்டர் தடிமன் கொண்ட ஒரு மண் நீர் பனியைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் நிரந்தரமாக நிலையான நீர் பனிக்கு காரனம், அதன் ஆழமான பகுதி. இயற்கையான குளிர் பொறியாக செயல்படுவதால், பனிக்குமேலே உள்ள காற்று குளிர்ந்து சுற்றிள்ள காற்றோடு ஒப்பிடும்போது கனமாக இருக்கிறது.