அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, பிரபலத் தொழிலதிபர்கள் வாரன் பஃபட், பில் கேட்ஸ், ஜெப் பீஸோஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், கிம் கர்தாஷியன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் நேற்று மதியம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. தங்களது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதே இவர்களுக்குச் சற்று தாமதமாகத்தான் தெரியவந்தது.
உடனடியாக செயலில் இறங்கிய ட்விட்டர் நிறுவனம், இவர்களின் ட்விட்டர் கணக்குகளிலிருந்து தவறான செய்திகள் பரவாதபடி தடுத்து நிறுத்தியது. எனினும், பங்குச்சந்தையில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்கு விலை அதலபாதாளத்துக்குச் சென்றது.
பிட் காய்ன் மோசடியாளர்கள் இத்தகைய சூழலைச் சாதகமாக்கி சில மணி நேரங்களில் கோடிக்கணக்கில் மோசடி செய்வது வழக்கமென்று தெரிகிறது. அதேபோல, நேற்றும் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட சில நிமிடங்களில் பொதுமக்களிடமிருந்து பல லட்சக்கணக்கான டாலர்களை பிகாய்ன் மூலமாக ஹேக்கர்கள் சூறையாடியிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் உலக அளவில் பிட்காய்ன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.