Thetimes24 Logo

அடி மேல் அடி வாங்கும் சீனா… கொரோனாவை தொடர்ந்து பிளேக்… அதிர்ச்சியில் சீன அரசு!!

 

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ்  பரவி இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசில் இருந்து மீண்ட சீனா தற்போது மீண்டும் கொரோனாவிடம் சிக்கியுள்ளது. அதிலிருந்து மீண்டு வர சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புதிய பிரச்சனை ஒன்றில் சீனா சிக்கியுள்ளது. 

சீனாவில் தற்போது எலியின் மூலம் பரவக்கூடிய பிளேக் நோய் பரவ தொடங்கி உள்ளது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் (ஜூலை.4) கண்டறியப்பட்டது. இதை அடுத்து பாதிக்குள்ளான நபர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதற்கிடையே பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த உஷார் நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு கடந்த  ஜூலை.1 ஆம் தேதி பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டது. மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் இறைச்சியை தின்றதால் இவர்கள் பிளேக் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனாவே ஓய்ந்தபாடில்லை. அதற்குள் மற்றொரு நோய் பரவத்தொடங்கியதால் சீனா அரசு மற்றும் மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

English Summary

Continued plague of Corona Chinese government in shock

Thetimes24 Logo