Thetimes24 Logo

சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய் பாதித்தவர்களுக்கு கூடுதல் கவனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாவும், சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஏற்கனவே 1000 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டு செயல்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை 70 ஆயிரம் கொரோனா வைரஸ் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தீவிர அறிகுறியுடன் வருபவர்கள் அழைத்துச் செல்வதற்காக அதிநவீன பேட்டரி கார் வசதி, ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஊர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, கிண்டி, கிங் இன்ஸ்டிடியூட்-ல் கொரோனா மருத்துவமனை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையைப் பார்த்து, பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும், அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தளர்வுகள் இருந்தாலும் சுயக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் அமைச்ச்ர விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

English Summary

Pay more attention to people suffering from kidney disease and cancer

Thetimes24 Logo