தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் பாதுகாக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 6 லட்சத்தை தாண்டியுள்ளது என்றால், தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி நடக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவில் வாகனங்கள் செல்வது, கடைகளில் கூட்டமாக செல்வதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு பெட்ரோலிய விற்பானையாளர் சங்கம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பெட்ரோல் பங்க் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று, முகக்கவசம் அணியும் பட்சத்தில் அவர்களுக்கு பெட்ரோல் - டீசல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், பெட்ரோல் பங்குகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.