Thetimes24 Logo

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசனுக்காக ஆஜராகும் திமுக பிரமுகர் ராஜ்திலக்! அம்பலமாகும் திமுகவின் இரட்டை வேடம்!

 

முருகக்கடவுளை கறுப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்தவர்கள் இழிவுபடுத்திய விவகாரத்தை அனைவரும் கண்டித்தபின்னும் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் கண்டிக்காமல் மவுனம் காத்தார். இந்துக்களுக்கு திமுகவும் ஆதரவுதான் என்று வாய் வார்த்தைக்கு மட்டும் சொல்லும் அவர், இப்போது இந்துக்களை அவமானப்படுத்திய கறுப்பர் கூட்டத்தைக் கண்டிக்காதது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட பலரும் கண்டித்ததோடு, திமுகவுக்கும் அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்குமோ என்று சந்தேகம் எழுப்பியிருந்தார்கள். 

இந்த நிலையில், கறுப்பர் கூட்டம் சேனலைச்சேர்ந்த செந்தில் வாசன், திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் பணியாற்றிய செய்தி முதலில் வெளிவந்தது. அடுத்ததாக தற்போது, கறுப்பர் கூட்டத்துக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வக்கீலும் திமுகவைச் சேர்ந்தவராக இருப்பதால், இந்த சம்பவத்தை திமுக பின்புலத்திலிருந்து நடத்தியிருப்பது தெரிய வருகிறது.

இதுகுறித்து அதிமுக தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சிங்கை ஜி.ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவில், திமுகவால் நியமிக்கப்பட்டு பப்ளிக் ப்ராசிகியூட்டராகப் பணியாற்றிய ராஜ் இளங்கோவின் மகன் ராஜ் திலக், கறுப்பர் கூட்டம் செந்தில் வசந்தை ஆதரித்து நீதிமன்றத்தில் ஆஜராவது ஏன்? என்று கேட்டுள்ளார். இந்த ராஜ் திலக், திமுக ராஜ்ய சபா எம்பி தேர்தலில் நாமினியாக இருந்த என்.ஆர்.இளங்கோவின் ஜூனியர் என்ற கூடுதல் விவரத்தையும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்துக்களை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட கறுப்பர் கூட்டத்துடன் இணைந்து திமுகவும் செயல்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு  திமுகவின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது..! 

English Summary

karuppar kuuttam with dmk

Thetimes24 Logo