கொரோனா பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்தநிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4 ஆயிரத்து 692 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் 528 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 536 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் தூய தங்கம் (24k) ஒரு கிராம் 68 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 926 ரூபாய்க்கும், 8 கிராம் தூய தங்கம் 544 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 54 ரூபாய் 40 காசுகளுக்கும் கட்டி வெள்ளி கிலோ 54 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.