இத்தாலியின் முதன்மை கால்பந்து லீக்கான செரி-ஏ லீக் இந்திய நேரப்படி இன்று (ஜூலை.8) அதிகாலை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் யுவென்டஸ் - ஏசி மிலன் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் 2 ஆவது பாதியில் ஆட்டம் தொடங்கியதும் 47 ஆவது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் ஆட்ரியன் ரேபியோட் முதல் கோலை அடித்தார்.

இதை அடுத்து ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவென்ஸ் 2-க்கு பூஜ்யம் என முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் ஏ.சி. மிலன் அணி வீரர்கள் மின்னல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 62 ஆவது நமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இப்ராஹிமோவிச் அதை கோலாக்கினார்.

அதனை தொடர்ந்து 66 ஆவது நிமிடத்தில் பிரான்ங் கெஸ்சி கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் ரபேல் லியோ கோல் அடித்தார். ஐந்து நிமிடத்திற்குள் மூன்று கோல்கள் அடித்ததால் 3க்கு 2 என ஏ.சி. மிலன் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 80 ஆவது நிமிடத்தில் ஆன்டே ரெபிக் மேலும் ஒரு கோல் அடிக்க ஏ.சி. மிலன் 4க்கு 2 என வெற்றி பெற்றது.