Thetimes24 Logo

கார் மோதி முதியவர் மரணம்.. பிரபல கிரிகெட் வீரர் கைது

 

இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 64 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, குசால் மெண்டிஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அருகே பனடுரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பனடுரா பகுதியில், மெண்டிஸ் காரில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, சைக்கிளில் எதிரே வந்த முதியவர் மீது இவரது கார் மோதியுள்ளது.

இதில் சைக்கிளில் வந்த முதியவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், அந்த முதியவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் தெரிந்த போலீசார், கிரிக்கெட் வீரர் மெண்டிசை கைது செய்தனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு, இலங்கை கிரிக்கெட் வீரர் கவுஷால் லோகுவாராச்சி, சாலையில் சென்ற பெண்ணின் மீது இவரது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கவுஷால்-க்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English Summary

Elderly man killed in car crash

Thetimes24 Logo