Thetimes24 Logo

களமாடுவோம் கொரோனாவை வெல்வோம்... மக்கள் பணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகளில் ஏராளமான மக்கள் பணிகளை செய்து வரும் இந்த வேளையில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளில், மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துரிதப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வந்த நிலையில் தற்போது வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளை கணக்கிலெடுத்து அந்தந்த பகுதிகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு வீடு வீடாக சென்று கொரோனா வைரஸ் சோதனை செய்வது, நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்வது என்று மக்கள் மீதான அக்கறையில் அவரது கவனம் இருந்து வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை அதிகளவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் கொரோனாவில் இருந்து குணமானோரின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. ஊரடங்கு காலத்தில் 8 லட்சம் பேருக்கு உணவு, நிவாரண உதவி என மக்களை பாதுகாக்கும் அரசாகவே எடப்பாடி அரசு இருந்து வருகிறது.

களமாடுவோம் கொரோனாவை வெல்வோம் என்பதற்கேற்ப முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் துரித செயல்பாட்டால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விரைவில் குறையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

English Summary

tn cm edappadi palaniswami great actions for corona treatment

Thetimes24 Logo