Thetimes24 Logo

ஸ்டாலினுக்கு அந்த தகுதி, அருகதையெல்லாம் எப்பவும் கிடையாது: வேலையை காட்ட துவங்கிய முருகன்! அலறும் தி.மு.க!

 

வடிவேலு கூட இந்தளவுக்கு அடி வாங்கியிருக்க மாட்டாரு சினிமாவுல. ஆனா நிஜத்துல கைப்புள்ள!யை விட மோசமான நிலைமை ஒரு அரசியல் தலைவருக்கு உருவாகியிருக்குதுன்னா அது ஸ்டாலினுக்குதான். சும்மா போறவங்களெல்லாம் அடிச்சுட்டு போறங்க போ!ங்கிற லெவலல்ல அவரோட ஜபர்தஸ்து இருக்குறப்ப, இந்தியாவை ஆளும் பா.ஜ.க.வின் தமிழக தலைவரான முருகன் தன் பங்குக்கு அடிக்காம போயிடுவாரா என்ன?

யெஸ்! தலைவர் பதவிக்கு வந்து பல நாட்களான பின்னும் அமைதியின் சொரூபமாகவே இருந்தார் முருகன். ஆனால் இப்போதுதான் தனது வேலையை காட்டத் துவங்கியுள்ளார். அதில் முதல் விக்கெட்டாக வகையாக ஸ்டாலினை அவர் போட்டுத் தாக்கியிருப்பதுதான் சிறப்பு, தனிச்சிறப்பே. முருகன், வெச்சு ஸ்டாலினை வெளுத்திருப்பதன் ஹாட் ஹைலைட் பாயிண்ட்கள் இதோ....

* எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு என்ன செய்வதுன்னே தெரியலை. அதனாலதான் இல்லாத கதைகளை இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கிறார். 

* கொரோனா காலத்தில் தமிழகத்திற்கு மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனல், அதை மறைத்துவிட்டு இஷ்டத்துக்கு மத்தியரசை குறை பேசிட்டிருக்கிறார். 

* சமூக நீதியை பற்றி ஸ்டாலின் பேசுறார். ஆனால் அவர் கட்சி எம்.பி.க்கள் தலைமை செயலரை சந்தித்துவிட்டு வெளியே வந்து ‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா? எங்களை இப்படி  நடத்திட?’ என்கிறார்கள். இதை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. 

* அவர் கட்சியின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, பட்டியலினத்தை சேர்ந்த நீதிபதிகளை தரக்குறைவாகப் பேசினர். ஆனால் இது பற்றியும் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. 

* அவரெல்லாம் சமூக நீதி பற்றிப் பேசுகிறார். அதைப்பேசிட என்றைக்குமே ஸ்டாலினுக்கு அருகதையோ, தகுதியோ கிடையாது. 

v

* கந்தர் சஷ்டி கவசத்தை  அவமதித்துப் பேசியவர்களை இதுவரையில் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. கறுப்பர் கூட்டத்துக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்? இதை விளக்க வேண்டும். கறுப்பர் கூட்டத்திற்கு தான் பின்புலமாக இல்லை என்றால் அதை ஓப்பனாக அவர் வெளியிட வேண்டும். இல்லையென்றால் அவர் மீதான சந்தேகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
..........என்று மனிதர் விளாசித் தள்ளியிருக்கிறார். 

சாந்தமான முருகன் இப்படி திடீரென எகிறியடிப்பார்! என்று எதிர்பார்க்காத தி.மு.க. தரப்போ ‘ஆஹா இவரும் ஆரம்பிச்சுட்டாரா?’ என்று அதிர்ந்து போய்க்கிடக்கிறது. 
 

English Summary

tn bjp leader talks about mk stalin

Thetimes24 Logo