Thetimes24 Logo

கிண்டியில் நொண்டியது ஸ்டாலினின் புத்தி: செருப்பால் கவிழிந்த தி.மு.க.வின்  செல்வாக்கு. 

 

’சும்மாவே சாமியாடுறவன் காலுல சலங்கையையும் கட்டிட்டால், அவன் கம்முன்னு இருப்பானா?’ என்பார்கள் கொங்கு மண்டல கிராமங்களில். அந்த நிலைதான் ஆகிப்போச்சு ஸ்டாலினுக்கு. அதுவும் அதே கொங்கு பகுதியில்தான் தனது கோக்குமாக்கு புத்தியினால் தன் கட்சிக்கு தானே சரிவை தேடிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். 

அதாவது  வெள்ளையனை எதிர்த்துப் போராடியவர் தீரன் சின்னமலை. கொங்கு மண்டலத்தில் இவருக்கென லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அடிப்படையில்  அ.தி.மு.க.வின் ஆதரவாளர்களான இவர்களை தங்கள் பக்கம் ஈர்க்க தி.மு.க.வினர் போராடித் தோற்பது வாடிக்கையான ஒன்று. இந்த நிலையில் இவருக்கான நினைவு தின நிகழ்ச்சியில் ஸ்டாலின் நடந்து கொண்ட முறையால்  கொதித்து எழுந்திருக்கும் சின்னமலையின் ஆதரவாளர்கள், எக்காலத்திலும் தி.மு.க.வுக்கு எங்களின் ஆதரவு கிடையவே கிடையாது! என அறிவித்துள்ளனர். 
அப்படி என்ன செய்துவிட்டார் ஸ்டாலின்?

அதாவது சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 216வது நினைவுநாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு முதல்வர் உள்ளிட்ட ஆளுங்கட்சி தரப்பினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த வந்தனர். அப்போது முதல்வர் தனது கால் செருப்பினை கழற்றிவிட்டு, சின்னமலையின் படத்தினருகே பயபக்தியுடன் வந்து நின்று, மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். 

ஆனால் சிறிது நேரம் கழித்து மரியாதை செலுத்த வந்த ஸ்டாலினோ, செருப்பை கழற்றாமல் நேரடியாக சென்று மலர் தூவி மரியாதை (!?) செலுத்தினார். இது அடுத்த அரைமணி நேரத்தில் சமூக வலைதளங்கள் வழியாக வைரலாகிவிட்டது. 
‘தீரன் சின்னமலை பல லட்சம் மக்களின்  உணர்வின் அடையாளம். கடவுளாக வணங்குகிறோம் அவரை. அப்பேர்ப்பட்ட வீரருக்கு செருப்பு  காலுடன் பூ போட்ட ஸ்டாலினின் ஆணவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களின் எதிர்ப்பை தேர்தலில் பதிவு செய்வோம். வழக்கம்போல் இந்த முறையும் தி.மு.க.வுக்கு எங்களின் ஆதரவு இல்லை. எங்களில் தப்பித் தவறி சிலர் தி.மு.க.வுக்கு வாக்களித்துக் கொண்டிருந்தாலும் அவர்களும் இனி அக்கட்சியை ஆதரிக்க மாட்டார்கள். 

ஸ்டாலினின் ஆணவ செருக்குக்கு இதுதான் எங்களின் பதிலடி.” என குரல் கொடுத்துள்ளனர் சில  லட்சம் வாக்குகள் அடங்கிய கொங்கு மண்டலத்தின் மக்கள். 
சோனமுத்தா போச்சா!?
 

English Summary

mk stalin insult theeran chinamalai

Thetimes24 Logo