திமுகவில் இருந்து வெளியேறுபவர்களைத் தடுக்க முடியாமல் திமுக தற்போது தரைகட்டிய கப்பலாக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம், சமீபத்தில் பாஜகவில் சேரப்போவதாக கூறப்பட்டது. டெல்லி சென்ற கு.க.செல்வம், பாஜக பிரமுகர்கள் சிலரை சந்தித்தார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த கு.க.செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் மீதுகுற்றம்சாட்டியதோடு, தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு சென்றார். இதனிடையே, கு.க.செல்வம், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கு.க.செல்வத்தை திமுக தலைமை, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவித்திருந்தது. தற்போது கட்சியில் இருந்து வெளியேறுபவர்களைத் தடுக்க முடியாமல் திமுக திணறி வருவதாகவும், தற்போது தரை தட்டிய கப்பலாக திமுக உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.