உலகையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் கூட தீர்வை எட்ட முடியவில்லை. இந்த நிலையில் வளர்ந்து வரும் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஓரளவு மட்டுமே இருக்கும் நமது தேசமோ இந்த நோய்த் தொற்றை வென்றிடத்தான் போராடி வருகிறது.
அதிலும் இந்தியாவின் தென் ஓரத்தில் ஒரு எல்லையாக இருக்கும் தமிழகமோ மிகப்பெரிய போரினை இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறது. காரணம் அதன் முதல்வர் எடப்பாடியார். வெறும் வாய்ப்பேச்சுக்காக இதை கூறவில்லை, இந்தப் பேரிடர் நோய்க் காலத்தில் முதல்வர் எடுத்திருக்கும் ஆக்கப்பூர்வ மற்றும் ஆரோக்கிய பூர்வ நடவடிக்கைகளை பற்றி ஆதாரங்களுடன் ஆங்கிலப் பத்திரிக்கைகளே பாராட்டித் தள்ளுகின்றன.
இந்த நிலையில், கொரோனாவில் மரணித்தவர்களின் எண்ணிக்கையாக அரசாங்கமே தந்த லிஸ்டை வைத்துக் கொண்டு, என்னமோ பெரிய மர்மத்தை கண்டறிந்தவர் போல் ஸீன் செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இதை அமைச்சர்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆவின் துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி “உலகை இன்னும் குழப்பும் கொரோனா சார்ந்த சந்தேக மரணங்களை தீர்மானிப்பதில் தரவுகளின் ஆய்வுகளை பின்பற்ற வேண்டியிருந்தது. ICMR-ஐ ஆலோசித்து தகுந்த வழிமுறைகளின்படி வேறுபாடுகளை விசாரிக்க தமிழக முதல்வரே நிபுணர் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
அதில் வந்த முடிவுகளை தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ளோம். ஆனால் மரணங்களை வைத்துக் கொண்டு கேவலமான அரசியலை செய்து வருகிறார் ஸ்டாலின். அதுதான் அசிங்கம்.
எங்கேயோ காணாமல் போன அண்டாவை கண்டுபிடிக்கும் துப்பறிவாளர் மாதிரி மேக்-அப் எல்லாம் போட்டு, கையை காலை ஆட்டி பின்னணி இசையோடு நாடக பாணியில் வீடியோவில் வாய்க்கு வந்ததை உளறும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின், இந்த மரண அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று வெளுத்துள்ளார் அமைச்சர்.
அப்டி போடு!