Thetimes24 Logo

உனக்கும் தகுதியில்ல, உங்கப்பாவுக்கும் தகுதியில்ல: ஸ்டாலினையும், அவர் மகனையும் வெச்சு விளாசிய அமைச்சர் 

 

தெளிய வெச்சு, தெளிய வெச்சு, அடிக்கிறது! அப்படின்னு சொல்லுவாங்களே அதை ரொம்பத் தெளிவா செஞ்சுட்டு இருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. யாரை அப்படி வெளுக்கிறார்? என்று சின்னப்புள்ளத் தனமாக நீங்கள் கேட்கக் கூடாது. வேறு யாரை?...வதந்தியார் ஸ்டாலினையும், தி.மு.க.வையும்தான். சென்னையில் கார் ஏறும்போது தி.மு.க. மற்றும் ஸ்டாலினின் பொய் புகார்களுக்கு ஆதாரப்பூர்வமாக ஒரு பதிலை தந்துவிட்டு கிளம்பும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தன் விருதுநகர் மாவட்டத்துக்குள் 
நுழைந்ததும் அங்கேயும் மீடியாக்களிடம் தி.மு.க.வின் ஒரு  புதிய மொள்ளமாரித்தனத்துக்கு எதிராக ஆதார சவுக்கடி வீசுவார். 

சில நேரங்களில் இடைப்பட இடத்தில் காஃபி சாப்பிடும் போது கூட ட்விட்டரில் இப்படி ஒரு அட்டாக்கை நிகழ்த்துவார். இப்படித்தான் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை வதந்தியார் ஸ்டாலினையும், அவரால் கெக்கேபிக்கே என வழிநடத்தப்படும் தி.மு.க.வையும் வெச்சு வெளுக்கிறார் அமைச்சர். 

அந்த வகையில் லேட்டஸ்ட், ஹாட்டஸ்ட் அட்டாக் ஒன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். இதோ அது....”சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியிலான ஊழல் புரிந்தோர் என குற்றம்சாட்டப்பட்டவர்கள், திருட்டு ரயிலேறி சென்னை வந்தவர்கள், சட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்றி செல்வ செழிப்பானவர்கள்தான் உங்களின் வம்சம். 
ஆனால் தன் வாழ்க்கையை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் தியாகம் செய்த எங்கள் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு எடப்பாடியார் சூட்டியது, தமிழக மக்களின் நீண்ட நாள் ஏக்கத்துக்கான தீர்வு. 

இதை குறை கூறும் தகுதியானது, அரசியல் கத்துக்குட்டியான உனக்கும் கிடையாது. உனக்கு அதை கத்துக் கொடுத்த தத்துக்குட்டிக்கும் (ஸ்டாலின்) கிடையாது.” என்று போட்டுத் தாக்கியுள்ளார். அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை முதல்வர் எடப்பாடியார் சூட்டினார். இதற்கு தமிழகம் எங்கும் இருந்து வரவேற்பும், ஆதரவும், கைதட்டல்களும் பெருகி நிற்கும் நிலையில், ஸ்டாலினின் மகன் உதயநிதி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதற்குத்தான் வெச்சு ’தத்துக்குட்டி, கத்துக்குட்டி’ என அக்குடும்பத்தை வெளுத்திருக்கிறார் அமைச்சர். 

English Summary

minister rajendra balaji tweet about udhayanithi

Thetimes24 Logo