Thetimes24 Logo

சைக்கோ கொலைகள், சரம்சரமாய் படுகொலைகள் செய்தவர்கள் சட்டம் ஒழுங்கை பற்றிப் பேசுவதா? ஸ்டாலினை தெறிக்கவிட்ட அமைச்சர் 

 

’சீவி  சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்து கொண்டு மூன்று கேமெராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும் அறிக்கைகளை வாசித்து கொரோனா காலத்திலும் இடைவிடாது படப்பிடிப்பு அரசியல் நடத்தும் மு.க. ஸ்டாலினெல்லாம் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசலாமா?’ என கேட்டாரே ஒரு கேள்வி, நம் ஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 

ஒழுங்காய் ஓடத் தெரியாத குதிரை, வீதியை கோணல் என்று சொன்னது போல்....தன் முதுகில் ஆயிரம் அழுக்குகளை வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின், உருப்படியாய் செயல்படும் தமிழக அரசை நோக்கி தேவையில்லாமல் புகார் சொல்வது பெரும் எரிச்சலைத் தந்திருக்கிறது ஆளுங்கட்சிக்கு. 

இதனால் ஆளாளுக்கு ஸ்டாலினை வெச்சு வெளுக்கிறார்கள் அமைச்சர்கள். அதில் எப்போதுமே தன் தாளிப்பில் எக்ஸ்ட்ரா நாலு மிளகாவை அள்ளிப்போட்டு வறுத்திடுவார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சமீபத்திய அவரது தாளிப்பின் ஹைலைட் பாயிண்ட்கள் இதோ....

*சட்டம் ஒழுங்கை சீரழித்ததற்காக மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட கறுப்பர் கூட்டத்தின் கையாள் தி.மு.க.வுக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எடப்பாடியார் அரசை விமர்சிக்கும் அருகதையானது எள் அளவும் இல்லை. 

* இந்த தகுதி இப்போது மட்டுமில்லை, எப்போதுமே இல்லை. 

* சாதிமத பூசலின்றி சட்டம் ஒழுங்கை பேணி காத்து, தவறிழைப்பவர்கள் யாராக இருப்பினும் தயவு காட்டாது நீதியை நிலை நாட்டும் எளிமைச் சாமானியர்தான் எங்கள் முதல்வர் எடப்பாடியார். அவரை குறித்து, ஸ்டாலினெல்லாம் குறை கூறலாமா?

* நாட்டின் ரகசியங்களை அண்டை நாட்டிற்கு கசியவிட்ட தேச விரோத குற்றச்சாட்டிற்காகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், அதற்கான தோட்டாக்களை தயாரிப்பதற்கு தன் வீட்டினுள்ளேயே கள்ளத் தொழிற்சாலை வைத்திருந்து சண்டியர்தனம் செய்பவரை தனது சட்டமன்ற உறுப்பினராக வைத்திருக்கும் சண்டாளர்களெல்லாம் எடப்பாடியாரைப் பற்றி வாய் திறக்கலாமா?

*ஓசி தேங்காய் முதல் ஓசி பிரியாணி வரை ஒன்றையும் விடாதவர்கள், நட்புக்கும் நஞ்சை ஊட்டி கதையை முடித்தவர்கள், நடைபயிற்சியை கொலை பயிற்சியாக்கிவர்களெல்லாம் இந்த அரசைப் பற்றி  பேசும் தகுதியை பெற்றவரர்களா? என்றும் இல்லை. 

* சைக்கோ கொலைகள், சரம் சரமாய் கொலைகள் என சட்டம் ஒழுங்கை சீரழித்தவர்களெல்லாம் உத்தமர் வேஷம் போடலாமா?

* பத்திரிக்கை ஊழியர்களை பட்டப்பகலில் தீவைத்து கொன்றவர்கள், பால்மலரை எரித்துக் கொன்று மூட்டை கட்டி முட்புதரில் எறிந்தவர்களெல்லாம் புத்தரைப் போன்று நடிக்கலாமா?
.............என்று அசால்டாய் தட்டி தூக்கியிருக்கிறார் ஆவின் அமைச்சர். 
செம்ம ஹாட்டு போங்கள்!

English Summary

minister rajendra balaji criticize about mk stalin

Thetimes24 Logo