Thetimes24 Logo

கறுப்பர் கூட்டம் சேனலுக்கு ஸ்பான்சர்  செய்தது தி.மு.க.வா?: போலீஸ் விசாரணையில் வெளிவரும் பொல்லாப்பு!?

 

சந்தனம் கலக்கப் போயி அது சாம்பலாகிப் போன கதையாகத்தான் ஆகிவிட்டது ’கருப்பர் கூட்டம்’ யூ டியூப் சேனலின் நிலைமை. ஆம், இந்துக்களை வெறுப்பேற்றுவதற்காக கந்தர் சஷ்டி கவசத்தினை  இகழ்ந்து பேசிய அந்த கூட்டம் இன்றைக்கு புழல் சிறையில் களி தின்று கொண்டிருக்கிறது. 

அந்தக் கூட்டத்தை விட்டுத் தள்ளுங்கள்! ஆனால், அவர்களுக்கு இந்த யூ டியூப் சேனலை நடத்துவதற்கு  நிதி உதவி செய்தவர்கள் யார்? என்பதை போலீஸ் தோண்டப் போக, அது தி.மு.க.வுக்கு தலைவலியை உருவாக்குகிறது என்பதுதான் இப்போது ஹைலைட்டே. 
இதைப் பற்றி பேசும் இதன் உள் விபரங்களை அறிந்தோர்... “கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் தி.மு.க. இருக்கிறதா? எனும் சந்தேகம் துவக்கத்திலேயே எழுந்தது. காரணம்? எப்போதுமே இந்துக்களுக்கு எதிரான கூட்டம்தான் தி.மு.க. எதிராக இருப்பது மட்டுமில்லாமல் இந்துக்களின் கடவுள்களையும், நம்பிக்கையையும் இகழ்ந்து பேசுவதில் முன்னணியில் நிற்பவர்கள்தான் தி.மு.க.வினர். 

இதனால்தான் இந்த சந்தேகம் எழுந்தது. அந்த சந்தேகத்தை மெய்ப்பிக்கும் விதமாக தி.மு.க.வின் ஐ.டி.விங் மாநில செயலாளரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இந்த கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் நிர்வாகியான செந்தில்வாசனுடன் இருக்கும் போட்டோக்களும், இந்த நபர் தி.மு.க.வை புகழ்ந்து கொட்டும் பதிவுகளும் வெளியாகின. 

இதன் பின் இந்த செந்தில் வாசனும், கந்தர் சஷ்டி கவசத்தை இகழ்ந்து பேசிய வாய்க்கொழுப்பு சுரேந்திரனும் மேலும் சிலருடன் கைது செய்யப்பட்டனர். சிறையில் களி தின்று கொண்டிருக்கும் இவர்களில், செந்தில் வாசனை போலீஸ் தங்களின் கஸ்டடியில் எடுத்து விசாரித்திருக்கின்றனர். 

குறிப்பாக அவர்களின் யூ டியூப் சேனலுக்கு நிதி உதவிகள் எங்கிருந்து வந்தது? யார் ஸ்பான்சர் செய்தார்கள்? என்பது பற்றி தோண்டித் துருவி எடுத்துள்ளனர். தி.மு.க.வின் மிக முக்கிய அணியின் மாநில நிர்வாகியே இந்த சேனலின் நிர்வாகிகளோடு நெருக்கமாக இருந்த வகையில் தி.மு.க.வை சார்ந்த பெரும் பணக்காரர்களே இந்த சேனலுக்கு நிதி உதவி செய்திருக்க கூடும் எனும் நம்பும் வகையிலேயே சில தகவல்கள் வந்து விழுந்திருக்கிறதாம் போலீஸின் கவனத்துக்கு. 

அதை வைத்து மேலும் தோண்டித் துருவுகையில் முழு உண்மையும்  கிடைக்கும்! என்று போலீஸ் தரப்பு எதிர்பார்க்கிறது.” என்கிறார்கள். இதற்கு உரிய விளக்கத்தை தி.மு.க.தான் அளிக்க வேண்டும். நிதி அளித்தது உண்மையென்றால் அதை ஓப்பனாக ஒப்புக் கொள்வதை தவிர வேறு வழியில்லைதானே!
 

English Summary

karupar kootam issue

Thetimes24 Logo