ஒரு கட்சியின் தலைவர், மக்கள் தலைவர் ஆகிறார் என்பதை மிக சில விஷயங்களே காட்டி கொடுத்துவிடும். அவற்றுள் ஒன்று, தாங்கள் வாழும் பகுதிக்கு அந்த தலைவரின் பெயரை வைப்பது. அப்படித்தான் எடப்பாடியாரின் பெயரை தாங்கள் வாழும் பகுதிக்கு வைத்திருப்பதன் மூலம் அவரை மக்கள் தலைவராக உயர்த்தியுள்ளனர் தமிழர்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தோப்புபாளையம் பேரூராட்சியின் 11வது வார்டில், முதல்வர் எடப்பாடியாரை பெருமைப்படுத்தும் வகையில் நூறு குடியிருப்புகள் கொண்ட நகருக்கு ‘எடப்பாடியார் நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த எடப்பாடியார் நகரை திறந்து வைத்துப் பேசிய பெருந்துறை எம்.எல்.ஏ.வான தோப்பு வெங்கடாசலம் “தமிழகத்தை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தலைவருக்கு மக்கள் செலுத்தும் நன்றிக்கடன், விசுவாசத்தின் வடிவம், மகிழ்ச்சியின் குறியீடுதான் இந்த நகருக்கு எடப்பாடியார் நகர் என பெயரிட்டது. காரணம், அந்தளவுக்கு உழைக்கிறார் முதல்வர். இந்த பகுதியை பொறுத்தவரையில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. அம்மா அவர்கள் கொடிவேரி திட்டத்தின் மூலம் இந்தப் பகுதிக்கு குறிப்பாக பெண்களுக்கு சுமையை குறைக்கிற வகையில் நாளொன்றுக்கு சுமார் 2 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டத்தை அறிவித்தார்.
அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தும் எடப்பாடியாரோ 240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அத்திட்டத்தை செயல்படுத்தினார். அதேபோல் இந்த பகுதி விவசாயிகளும், முதல்வர் விரைவாக செயல்படுத்தி வரும் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர். அதற்கான நன்றிக் காணிக்கையாகவும் முதல்வர் எடப்பாடியாரின் பெயரை வைத்துள்ளோம்.” என்கிறார்.
அழகுதான்!