Thetimes24 Logo

நாயை கூட விட்டு வைக்காத ஸ்டாலின் நிர்வாகி: கொலை வெறிபிடித்து ஆடும் தி.மு.க. கூட்டம் 

 

அரசியலுக்காக தி.மு.க.வில் நடக்கும் மர்ம சாவுகள்,  கொலைகள் எல்லாம் மிக குரூரமானவை. அவற்றை பட்டியலிட்டால் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே இருக்கும். ஸ்டாலினின் நண்பரான சென்னை அண்ணாநகர் ரமேஷின் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. சிறு குழந்தைகளுடன் கூடிய அழகான அக்குடும்பம் மரித்ததன் உண்மை காரணம் இதுவரையில் வெளியே வரவில்லை. இந்த விவகாரத்தில் ஸ்டாலினை சுற்றி இன்று வரை சர்ச்சை வளையம் சுழல்கிறது. 

சிவகங்கை மாவட்ட செயலாளரும், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமாக இருந்த தா.கிருட்டிணன், மதுரையில் காலை நடைப்பயிற்சியின்போது வெட்டி சாய்க்கப்பட்டார். தென் தமிழக தி.மு.க.வில் அதிகார போட்டியில் நடந்த கொலை இது. மாஜி தி.மு.க. அமைச்சரான ஆலடி அருணா, ஆலங்குளம் அருகே  நடைப்பயிற்சியின்போது கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கல்வித்தந்தை பேசப்பட்டாலும் கூட  அதன் நூல் தி.மு.க.வினுள்ளும் நீண்டது. 

மாஜி தி.மு.க. மத்தியமைச்சர் ராதிகா செல்வியின் உதவியாளர் பாபுராஜ், நெல்லை மாவட்டத்தில் ஒரு இரவில் கழுத்தறுத்து மர்மமாக கொல்லப்பட்டார். சிவகங்கை நகராட்சியின் தி.மு.க. சேர்மன் முருகன், காரில் ரிமோட்கண்ட்ரோல் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். ஆ.ராசாவின் உதவியாளர் சாதிக் பாட்ஷா மர்ம முறையில் தூக்கில் இறந்தார். அது கொலையே என்று இதுவரையில் பாட்ஷாவின் மனைவி போராடுகிறார். 
நெல்லை மாநகராட்சியின் மாஜி தி.மு.க. மேயர் உமாமகேஸ்வரி, உட்கட்சி பிரச்னையால் ஒரு பெண் நிர்வாகியால் குடும்பத்தோடு குரூரமாக கொல்லப்பட்டார். கருணாநிதியின் மகன் அழகிரியின் வலது கரமாக விளங்கிய பொட்டு சுரேஷ் என்பவர் நடு ரோட்டில் கோரமாக வெட்டி சாய்க்கப்பட்டார். 

இப்படி தி.மு.க.வில் ஆயுத கலாச்சாரம் மிக மிக அதிகம். தங்கள் கட்சிக்குள் இப்படி வெட்டிக் கொள்வது மட்டுமில்லாமல் பொது மக்கள் மீதும் ஆயுத பிரயோகம் செய்வதில் அக்கட்சியை மிஞ்ச முடியாது. அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டுதான் திருப்போரூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான இதயவர்மன். நில தகராறின் போது துப்பாக்கியை எடுத்து அவர் சுட, பொதுஜனம் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதயவர்மனின் வீட்டை சோதனையிட்டபோது அங்கே மினி ஆயுத தொழிற்சாலையே கண்டறியப்பட்டுள்ளது. 

இப்படி சக மனுஷனையே ஏதோ கார்னர் கடைக்குப் போயி டீ வாங்கிவிட்டு வருவது போல் கொலை செய்து கொண்டிருக்கும் தி.மு.க.வினர், விலங்குகளை ஜீவகாருண்யம் பார்த்து விட்டா வைப்பார்கள்?இப்படித்தான் செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்காரணை பேரூராட்சியின் 6வது வார்டு தி.மு.க.வட்டசெயலாளர் துரைராஜ். நேற்று முன் தினம் தெரு நாய் ஒன்றை, சாக்குப்பையில் தூக்கிப் போட்டு, பின் அதை கொடூரமாக அடித்துக் கொன்றிருக்கிறார். இதைப் பார்த்து பதறிய மக்கள் புளூகிராஸுக்கு தகவல் தந்திருக்கின்றனர். அவர்கள் வந்து  பார்த்தபோது சாக்குப் பையினுள் நாய் இறந்து கிடந்திருக்கிறது. 

இதையடுத்து துரைராஜ் மீது போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நாயையும் விட்டு வைக்காத நாசகார தி.மு.க! என்று கரித்துக் கொட்டுகின்றனர் மக்கள். 
 

English Summary

dmk person killed a dog

Thetimes24 Logo