Thetimes24 Logo

துப்பாக்கிச்சூடு… ஆள் கடத்தல்… தலைமறைவு… தொடரும் திமுக எம்.எல்.ஏ.வின் அராஜகம்!!

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கும் அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருத்தரப்பினருக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுத்தொடர்பாக நேற்று (ஜூலை.11) சென்னை இ.சி.ஆரில் இருத்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இருத்தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். அப்போது எம்.எல்.ஏ இதயவர்மன் இமயம்குமாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். அந்த குண்டு இமயம்குமார் காரை துளைத்தது. மேலும் அவ்வழியாக வந்த கீரை வியாபரி சீனி வாசனின் இடுப்பில் பாய்ந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதுத்தொடர்பாக காயமடைந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுக்குறித்து செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், நில அபகரிப்பு தொடர்பான மோதலில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் தூப்பாக்குச்சூடு நடத்தினார். அதில் குண்டடிப்பட்ட நபரை இதயவர்மன் கடத்தி வைத்துள்ளார். மேலும் சாட்சிகள் அனைத்தும் இதயவர்மனுக்கு எதிராக உள்ளதால் அவரும் அவரது தந்தையும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். விரைவில் கைது செய்வோம்” இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில் எம்எல்ஏ இதயவர்மனை காவல்துறையினர் இன்று (ஜூலை.12) அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English Summary

dmk mla idhayavaraman kidnapped witness

Thetimes24 Logo