Thetimes24 Logo

கண் தானத்தை ஊக்குவிக்கும் விதமாக கண் தானம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

 

 

தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டு அயராது உழைத்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானத்தை ஊக்குவிக்கும் விதமாக கண் தானம் செய்து அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்கிறார். 

தமிழகத்தில் உயிர்கொல்லி நோயான கொரோனா பரவல் அதிகமாக இருந்து வரும் வேளையில் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணியையும் மிகச்சிறப்பாக செய்து வருகிறது. மக்கள் நலனை தன்னலமாக முதலமைச்சர் கருதுவதால் தான் இந்தியாவிலேயே அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 

ஒருபுறம் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை முறையில் கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் மற்றொருபுறம் மக்களின் வாழ்வாதார பிரச்சனையை கருத்தில் கொண்டு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன், மாவட்டந்தோறும் நேரில் சென்றும் ஆய்வு நடத்தி வருகிறார். 

அதுமட்டுமின்றி, நாளை தேசிய கண் தான தினம் கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி கண் தானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், முன்மாதிரியாக திகழும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்துள்ளார். கண்கள் தானம் செய்ததற்கான சான்றிதழ் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது. 



நோயுற்றவர்களை காப்பதிலும், விவசாயிகள் மீது அக்கறை செலுத்துவதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும், மக்கள் நலச்சேவை ஆற்றுவதிலும் தனக்கு நிகர் தானாகவே திகழ்ந்து வந்த  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தற்போது  தனது கண்களை தானம் செய்து மக்கள் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்

English Summary

Cm edappadi palanisamy eye donate

Thetimes24 Logo