Thetimes24 Logo

அந்த சாக்கடைப் புழுக்களை திருத்துங்கண்ணே!: தி.மு.க.வின் வி.ஐ.பி.யை வெச்சு வெளுத்த அ.தி.மு.க. ஐ.டி.விங்!

 

’தரங்கெட்ட விமர்சனங்களையும், வதந்திகளையும், பொய்ப்புரட்டுகளையும் சோஷியல் மீடியா மூலமாக பதிவேற்றி, மோசமான அரசியல் செய்து கொண்டிருக்கிறது தி.மு.க. இதற்கு அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்கானது தகுந்த பதிலடியை தர வேண்டும்.’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஐடியா கொடுத்து 24 மணிநேரம் முடிவதற்குள்ளேயே வெகு சிறப்பான, தரமான சம்பவத்தை செய்துவிட்டது அ.தி.மு.க.வின் இணையதள அணி. 

தி.மு.க. இணையதள அணியின் மாநில செயலாளரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு மிக நேர்த்தியான அதேவேளையில் நெத்தியடியான பதிலை தந்திருக்கின்றனர். தனது குடும்பமானது ஆன்மிகத்தில் ஊறிய குடும்பம்! என்பதை குறிப்பிட்டு, அதேவேளையில் ‘அரசியலையும், ஆன்மிகத்தையும் கலக்க கூடாது. நான் பகுத்தறிவு இயக்கமான தி.மு.க.வில் இருக்கிறேன்.’ என்று தியாகராஜன் கூறியுள்ளதையும் குறிப்பிட்டு, அதற்கு மறுப்புவாதம் வைத்து பின்னி எடுத்துள்ளனர். அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப்பிரிவி மதுரை மண்டல செயலாளரான ராஜ்சத்யனும், கோவை மண்டல செயலாளரான சிங்கை ராமச்சந்திரனும். 

அவர்களது பதிவின் ஹைலைட் பாயிண்ட்கள் இப்படியாக நீள்கின்றன....

* பேரறிஞர் அண்ணா அவர்களால் துவங்கப்பட்டு, இன்று ஒரு குடும்பத்தின் அசுரப்பிடியில் சிக்கிக்கிடக்கும் கட்சியில் பொறுப்பு வகித்து வரும் அண்ணன் தியாகராஜனே! என ஆரம்பத்திலேயே டாப் கியர் போட்டுள்ளனர். 

* திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியில் நீங்கள் ஒரு நிர்வாகி மட்டுமே. ஆனால் நாங்கள் விமர்சிப்பதும், கேள்வி எழுப்புவதும் தி.மு.க.வின் தலைமை! என சொல்பவரின் பாரபட்சமான மதக் கொள்கைகளைத்தான். 

* ’ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!’ என்ற அண்ணாவின் கொள்கைப்படி தலைவரும், அம்மாவும் எல்லா மதங்களையும் சமமாக பாவித்தனர், மதித்தனர். இதுதான் எங்கள் கட்சியின் கொள்கை வரலாறு. 

* ஆனால் வைத்துவிட்ட திருநீறை அழித்தவர் உங்கள் கட்சித் தலைவர். இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்வதில்லை. அப்படியே தப்பித்தவறி வாழ்த்து போட்டுவிட்டாலும் அதை அழித்துவிடுகிறார். 

* கருணாநிதியோ ‘இராமன் என்ன எஞ்சினியரா, பாலம் கட்ட?’ என்று கேட்டார். நெற்றியில் வைத்த குங்குமத்தை ’ரத்தமா?’ என்று விமர்சித்தார். ஸ்டாலினின் சகோதரி கனிமொழியோ திருப்பதி கோவில் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பற்றி பேசிய கிண்டல்களையும், கேலிகளையும் எங்கள் வாயால் சொல்ல விரும்பவில்லை. 

* தியாகராஜனே, உங்களின் கண்பார்வையில்தானே ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில்வாசன் மிக மோசமான முறையில் கந்த சஷ்டி கவசத்தை இழிந்து பேசிய பதிவை அப்லோடு செய்த கேவலமான செயலை செய்துள்ளார். தனிப்பட்ட முறையில் ஆன்மீகவாதீயான நீங்கள் ஏன் அதை கண்டிக்கவில்லை?

* அனைத்து மதங்களையும் ஒன்று போல் மதித்து நடப்பதுதானே உண்மையான மதச்சார்பின்மை!அப்படி நடக்கும் எங்களுக்கு எந்த அறிவுரையையும் நீங்கள் மெனெக்கெட்டு செய்ய வேண்டியதில்லை. 

*ஆனால், மதசார்பின்மை எனும் பெயரில் இந்து மதத்தை மட்டுமே அசிங்கப்படுத்தும் உங்கள் தலைவர் ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழிக்குதான் இவை தேவை. 

*ஆயிரக்கணக்கானோர் கூடி இருக்கும் இடத்தில் மேடையில் நின்றபடி இந்து மந்திரங்களையும், கடவுளையும் விமர்சித்துப் பேசும் ஸ்டாலினுக்கு இந்த அறிவுரைகளை வழங்குங்கள். 

* அமைதிப்பூங்காவான தமிழகத்தில், வாக்குவங்கிக்காக மக்களிடையே பிரிவினையை உருவாக்கிடும் சாக்கடைப் புழுக்களாக செயல்படும் அவர்களை அறிவுரை வழங்கித் திருத்துவதே! பாரம்பரியமான அன்மிக குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு கடமையாகும். 
..................என்று வீசியுள்ளனர் விமரசன அறிவுரைகளை. 

 

English Summary

admk it wing rajsathyan reply to dmk

Thetimes24 Logo