இந்தியன் ரயில்வேயின் பார்சல் சேவை இதுவரை இந்திய எல்லைக்குள் மட்டுமே இருந்துவந்தது. இந்திய ரயில்வே துறை வரலாற்றில் முதன்முறையாக பார்சல் சேவையை எல்லை கடந்து சொண்டு செல்வதற்காக சிறப்பு ரயிலை இயக்குகிறது இந்தியன் ரயில்வே.
ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து சாலைமார்க்கமாக வங்காள தேசத்துக்கு மிளகாய் வற்றல் கொண்டு செல்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா காரணமாக சாலை மார்க்கமாகக் கொண்டு செல்வது தடைபட்டுள்ளது. எனவே இதற்கு மாற்று யோசனையாக சிறப்பு ரயில்மூலம் கொண்டு செல்கிறது.
பொதுவாக சாலைமார்க்கமாக மிளகாய் வற்றலைக் கொண்டுசெல்லும்போது ஒரு டன்னுக்கு 7 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதுவே சரக்கு ரயில் மூலமாக எடுத்துச்செல்லும்போது ஒரு டன்னுக்கு 4,608 ரூபாய் மட்டுமே செலவாகும். மொத்தம் 16 பெட்டிகளில் 384 டன் மிளகாய் வற்றல் கொண்டு செல்லப்படுகிறது. வங்கதேசத்தைச் சேர்ந்த வியாபாரிகளின் கோரிக்கை, மற்றும் இந்திய மிளாய் விவசாயிகளின் கோரிக்கைகளையடுத்து மத்திய அரசு எல்லை தாண்டி ரயிலை இயக்க முன்வந்துள்ளது.