Thetimes24 Logo

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியது!

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரேநாளில் பதிவாகும் உச்சபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டி, 8,20,912 பேராக உயர்ந்துள்ளது. நேற்று காலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 7,93,802 ஆக இருந்தது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,83,407  - ஆக உள்ளது.  மகாராஷ்டிராவில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,38,461 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  5,15,386 ஆக உள்ளது. கடந்த ஒரு 24 மணி நேரத்தில் 519 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,123 ஆக உயர்ந்துள்ளது.

English Summary

corona-affected-people-in-india-8-lakhs

Thetimes24 Logo