Thetimes24 Logo

வெளியானது ’துக்ளக் தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக்... மாஸ் கெட்டப்பில் விஜய்சேதுபதி!!

 

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு சுமார் 50% வரை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தின் இணை தயாரிப்பாளரும், 'கோப்ரா', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'சீயான் 60' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அந்த படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சன் டிவியின் சமூகவலைதள பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

English Summary

thuglaq darbar first look release

Thetimes24 Logo