Thetimes24 Logo

சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி... சிகிச்சைக்கு உதவும் கமல்

 

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கான செலவு மற்றும், குழந்தைகளின் கல்வி செலவை நடிகர் கமல் ஹாசன் ஏற்றுள்ளார்.

வில்லன் நடிகர் பொன்னம்பலம், 1988 ஆம் ஆண்டு தமிழ்த் துறையுலகில் நுழைந்தார். கலியுகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், அந்த படத்தில் சிறைக் கைதியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 

1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி வில்லன் நடிகராக பொன்னம்பலம் வலம் வந்தார். ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருப்பார். இவரது மிரட்டலான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. 

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் இருந்து பொன்னம்பலம், வெளியேறும்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று நடிகர் பொன்னம்பலத்தை அழைத்து வந்தார். இந்த நிகழ்வு, பொன்னம்பலத்தின்மீது கமல் வைத்திருந்த மரியாதையைக் காட்டியது. 

இந்த நிலையில், நடிகர் பொன்னம்பலம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு காரணமாக அடையாறில் உள்ள விஹெச்எஸ் மருத்துவமனையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

பொன்னம்பலம் சிகிச்சைக்கு நடிகர் கமல் ஹாசன், உதவி செய்து வருகிறார். மேலும், பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவையும், கமலே ஏற்றிருக்கிறார். நடிகர் கமல் ஹாசனின் உதவிக்கு, பொன்னம்பலத்தின் குடும்பத்தார், உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நடிகர் பொன்னம்பலம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளதை அறிந்த அவரது ரசிகர்கள், உடன் நடித்த நடிகர்கள், உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். பொன்னம்பலம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போட்டோக்கள், வீடியோக்கள் தற்போது வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

English Summary

kamalhassan help to ponnambalam medical treatment

Thetimes24 Logo